The Woman King - 2022

இந்த படம் 18 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

The Woman King - 2022
English - Historical Action / Drama
Tamil Dub✅

படத்தோட கதாநாயகி ஆப்பிரிக்க நாட்டில் உள்ள டஹோமி ராஜ்ஜியத்தின் அகோஜி எனப்படும் பெண் படைக்கு தளபதி. ஐரோப்பிய நாட்டிற்கு அடிமைகளை விற்க்கும் ஓயோ ராஜ்ஜித்திற்காக கடத்தப்பட்ட மக்களை அகோஜி படையினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

இதனால் டஹோமி ராஜ்ஜியத்தின் அரசர் ஒயோ ராஜ்ஜியத்திற்கு கப்பம் கட்டப்போவதில்லை என்று முடிவு எடுக்கிறார். 

அகோஜி படையின் தளபதியான கதாநாயகி ராஜ்ஜியத்தின் பாதுகாப்பாக இருக்க அடுத்த தலைமுறை இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்க அந்த கூட்டத்தில் ஒரு இளம் பெண் வந்து சேர்கிறாள்.

ஒயோ இராஜ்ஜியத்தின் தளபதி தளபதி தன் படையுடன் டஹோமிற்கு கப்பம் வசூல் செய்ய வருகிறான். ஆனால் கொடுக்க வேண்டிய கப்பம் குறைவாக இருப்பதால் அதற்கு ஈடாக 40 அகோஜிகளை கேட்கிறான். மேலும் தங்களுக்கு சொந்தமான துறைமுகம் இனி ஒயோவிற்கு சொந்தமானது என சொல்கிறான்.

இதனை டஹோமி ராஜ்ஜியத்தின் மறுத்து 20 அகோஜிகளை நானே தேர்வு செய்து கொடுக்கிறேன் எனவும், துறைமுகம் எங்கள் பயன்பாட்டிற்கு வேண்டுமெனவும் ஒப்பந்தம் செய்கிறார்.

ஏற்கனவே கதாநாயகி மற்றும் ஓயோ படை தளபதிக்கும் இடையே பகை உள்ளது. இதனால் அந்த தளபதியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என இருப்பவள்.

ஒருகட்டத்தில் இரு ராஜ்ஜியங்களுக்கு இடையே போர் வருகிறது. அகோஜி படையில் வந்து சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கதாநாயகிக்கும் இடையே இடையே உள்ள தொடர் என்ன? கதாநாயகி மற்றும் எதிரி படை தளபதிக்கும் இடையே உள்ள பகை என்ன? அவனை கொலை செய்ய நினைப்பதற்கான காரணம் என்ன? இரு ராஜ்ஜியங்களுக்கு இடையே நடந்த போரில் வென்றது யார்? என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என எல்லாத்தையும் செய்தது பெண்கள் தான்.

படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சிறப்பாக நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.

Action பட ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். சண்டை காட்சிகள் எல்லாம் தரம்.

இந்த படம் குடும்பத்தோடு பார்க்க முடியாது.

My Rating : ⭐⭐⭐.5/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023