Posts

Showing posts with the label Drama

Raththam - 2023

Image
Raththam - 2023 Tamil - Crime/Drama பிரசவத்தின் போது மனைவி இறந்ததற்க்கு தான் காரணம் என்கிற மனநிலையில் இருக்கும் கதாநாயகன். கதாநாயகன் சென்னையில் செய்து கொண்டு இருந்த புலனாய்வு பத்திரிகை வேலையை விட்டு மகளுடன் கொல்கத்தாவிற்கு சென்றுவிடுகிறார். நாளடைவில் குடிக்கு அடிமையாகி விடுகிறார். இந்நிலையில் கதாநாயகன் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் பத்திரிக்கையாளரும், நண்பருமான நிழல்கள் ரவின் மகன் கொலை செய்யப்படுகிறார். நிழல்கள் ரவி கேட்டுக்கொண்ட காரணத்தால் மீண்டும் அந்த பத்திரிக்கை நிறுவனத்தில் சேர்கிறார் கதாநாயகன். கதாநாயகன் நண்பன் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க தொடங்கும் போது சில கொலைகள் நடக்கின்றது. நடக்கும் கொலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதாக கதாநாயகன் கண்டுபிடிக்கிறார். அந்த கும்பல் யார்? அவர்கள் கொலை செய்வதற்கான காரணம் என்ன? அதன் பிண்ணனியில் இருப்பது யார்? கதாநாயகயன் இறுதியில் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. அண்ணே ஆண்டனி அண்ணே ஒரு நல்லா கதையை தேர்ந்தெடுத்து நடிங்க சத்தியமா முடியல. இயக்குநர் கதை நன்றாக எழுதி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கவனம் ச...

800 - 2023

Image
800 - 2023 Tamil - Biopic Sports/Drama இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் குழந்தை பருவத்தில் இருந்து 800 விக்கெட் எடுத்தா காலகட்டம் வரை படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆங்கியேலயர்களால் அழைத்து சென்ற குடும்பங்களில் முத்தையா முரளிதரன் குடும்பம் ஒன்று. அங்கே நடக்கும் பிரச்சனைகளுக்கு இடையே சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் முத்தையா முரளிதரனுக்கு இருக்கிறது. அங்கே நடக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொண்டார்? இலங்கை கிரிக்கெட் அணியில் எப்படி சேர்ந்தார்? இலங்கை அணிக்கு விளையாடுவதால் அவர் சந்தித்த சிக்கல்கள் என்ன? கிரிக்கெட்டில் 800 விக்கெட் எப்போது எடுத்தார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். தலைவர் மேதகு பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்த நரேன் வரும் போது எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் எல்லாம் வைத்து பார்த்தால் இது தான் உண்மையும் உண்மையின் உண்மையா என்ன இதெல்லாம் மறைந்தவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்காக காலமெல்லாம் காத்திர...

Irugapatru - 2023

Image
Irugapatru - 2023 Tamil - Family/Drama கணவன் மனைவி இருவருக்கும் இடையே வரும் சிறு சிறு பிரச்சனைகளையும் அதற்கான தீர்வை சொல்லும் படமாகவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இறுகப்பற்று. மனநல ஆலோசகரான ஷ்ரதா ஸ்ரீநாத்-யும் விக்ரம் பிரபும் தம்பதிகள். இருவருக்கும் இடையே எந்தவொரு பிரச்சனைகள் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஷ்ரதா ஸ்ரீநாத். இன்னொரு தம்பதிகளான விதார்த் அபர்ணதி இருவருக்கும் ஓரு குழந்தையும் உள்ளது. அபர்ணதி குண்டாக இருப்பதால் அதிகமான வெறுப்பை காட்டும் விதார்த். இதனால் விவாகரத்து செய்ய முடிவு எடுக்கிறார். காதல் திருமணம் செய்துக்கொண்ட இன்னொரு தம்பதிகளான ஸ்ரீ மற்றும் சானியா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை போட்டு கொள்கிறார்கள். இந்த இரு தம்பதிகளின் பிரச்சனை மனநல ஆலோசகரான ஷ்ரதா ஸ்ரீநாத்யிடம் வருகிறது. ஒருகட்டத்தில் அதுவும் ஷ்ரதா மற்றும் விக்ரம் பிரபு இருவருக்கும் இடையே பிரச்சனை வர காரணமாகிறது. ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் விக்ரம் பிரபு இருவருக்கும் இடையே பிரச்சனை வர காரணம் என்ன? ஷ்ரதா மற்ற இரு தம்பதிகளுக்கு கொடுத்த ஆலோசனை என்ன? இந்த மூன்று தம்பதிகளுக்கு...

Chittha - 2023

Image
Chiththa - 2023 படத்தோட கதாநாயகன் பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளர் வேலை செய்யும் நபர். அதே நேரத்தில் கதாநாயகனின் முன்னாள் காதலியான கதாநாயகியும் வேலை செய்கிறாள். கதாநாயகனின் அண்ணன் இறந்து விட அவரது மகளை தன் மகளாக அதீத பாசம் வைத்து வளர்க்கிறார். அந்த பெண் தன்னுடைய சித்தாப்பாவை சித்தா என்று அழைக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே பாச பிணைப்பு உள்ளது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் காவல் துறையினாரால் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட கதாநாயகன் குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்படுகிறார். கதாநாயன் வெளியே வரும் வேளையில் தன்னுடைய அண்ணன் காணாமல் போகிறாள். கதாநாயகன் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கதாநாயகனின் அண்ணன் மகளை கடத்த யார்? கடத்தியதிற்கான காரணம் என்ன? அந்த பெண் குழந்தைக்கு நடந்தது என்ன? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படம் நல்லா இருக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். இந்த காலகட்டத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். என்னை பொறுத்தவரை குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்களை விட ஆண் பிள்ளைகளை பெற்றவர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தில் நடித்த ...

Iraivan - 2023

Image
#Iraivan - 2023 படத்தோட கதாநாயகன் ஜெயம் ரவி மற்றும் நரேன் இருவரும் காவலர்கள் மற்றும் நண்பர்கள். நரேனின் தங்கையாக வருபவள் கதாநாயகி நயன்தாரா படத்துக்கு தேவை இல்லாத ஆணி. கதாநாயகன் எதை செய்தாலும் அதற்கு ஆதர்வு தரும் நபர் நண்பன் நரேன். இந்நிலையில் சென்னையில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கில்லர் யாரு என்பதை கண்டுபிடிக்க தடுமாறும் கதாநாயகன். ஒருகட்டத்தில் கில்லரை பிடிக்க சென்ற போது நரேன் இறந்துவிடுகிறார். நண்பன் இறந்ததற்கு காரணமே தான் தான் என்ற விரக்தியில் வேலையை விட்டுவிடுகிறார் கதாநாயகன். சீரியல் கில்லர் இறந்ததாக நினைக்கும் வேலையில் மீண்டும் அதே பாணியில் கொலைகள் நடக்கின்றது. கில்லர் இந்த முறை கதாநாயகனுக்கு கடிதம் அனுப்புகிறான். கில்லர் கடிதம் அனுப்ப காரணம் என்ன? இருவருக்கும் இடையே உள்ள தொடர் என்ன? சீரியல் கில்லரை பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. எதுக்கு இந்த வேலை கொடூரமான காட்சிகள் மற்றும் இருந்தா படம் வெற்றி பெருமா என்ன? அதற்கு சரியான கதை மற்றும் திரைக்கதை இரண்டும் இல்லாமல் எப்படி வெற்றி பெரும். படத்தின் கதைக்கு கா...

Gran Turismo - 2023

Image
Gran Turismo - 2023 English - Biopic Action/Sports Drama Tamil Dub✅ படத்தோட கதாநாயகன் ஜவுளி கடையில் வேலை செய்யும் நபர். அதே சமயம் Gran Turismo கார் ரேஸிங் வீடியோ கேம் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் கதாநாயகனுக்கு உண்மையான கார் பந்தய வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இந்நிலையில் GT Academy நிறுவனம் வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடும் நபர்களுக்கு இடையே போட்டியை நடத்துகிறது. அதில் வெற்றி பெறும் சிலரை வைத்து உண்மையான கார் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்க உள்ளது. கதாநாயகன் கலந்து கொண்ட போட்டியில் வெற்றியும் பெறுகிறார். அந்த பயிற்சியில் வெற்றி பெரும் நபர்களில் சிலரை தேர்ந்தெடுத்து Nissan நிறுவனத்தின் சார்பில் கார் பந்தய வீரராக போட்டியிடும் வாய்ப்பை அளிக்கும். கதாநாயகன் செய்யும் செயல்கள் முன்னாள் கால் பந்து விளையாட்டு வீரர் ஆன அப்பாவுக்கு பிடிக்கவில்லை. கதாநாயகன் தன்னுடைய ஆசை என்ன என்பதை சொல்லவே தயங்குகிறான். கதாநாயகனுக்கு பயிற்சி அளிக்கும் நபராக வருபவர் கார் பந்தய வீரராக நினைத்து முடியாமல் கடைசியில் மெக்கானிக்காக இருக்கும் நம்ம Stranger Things Hopper Uncle ((யோவ...

Friday Night Plan - 2023

Image
Friday Night Plan - 2023 Hindi - Teenage Comedy/Drama Tamil Dub✅ அண்ணன் தம்பி இவனுங்களுக்கு இடையே எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு பஞ்சாயத்து இருந்துட்டே இருக்கும். ஒரு நாள் இவங்க அம்மா தொழில் சம்பந்தமா ஊருக்கு போறாங்க. அன்று பள்ளியில் நடக்குற கால் பந்து போட்டியில் அவனே எதிர்பாராத விதமாக ஆட்டத்தில் கலந்து கொள்ள நேர்கிறது. ஆட்டத்தில் Goal அடித்து தன்னுடைய அணியை வெற்றி பெறச் செய்கிறான். அதற்கு பிறகு பள்ளியில் வெத்தா இருந்தவன் ஒவர் நைட்ல ஒபாமா ஆகிட்டான். சக மாணவர்கள் பார்ட்டிக்கு வர சொல்லி அழைக்கிறார்கள். இருவரும் இணைந்து அம்மாவுக்கு தெரியாமல் பார்ட்டிக்கு போகிறார்கள். "தம்பிவுடையான் படைக்கு அஞ்சான்" சொல்லுவாங்க ஆன வர எல்லா பிரச்சனைக்கும் அவன் தான் காரணம். பார்ட்டிக்கு சென்றயிடத்தில் தம்பிகாரன் செய்த சேட்டையால் பிரச்சினை வர இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. அம்மா வீட்டிற்கு வருவதற்குள் இருவரும் பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? இருவருக்கும் இடையிலான மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. படம் நல்லா காமெடியா இருக்கு. ஒருமுறை பார்க்கலாம். My Rating : ⭐⭐.75...

Fatafati - 2023

Image
Fatafati - 2023 Bengali - Family Drama Tamil Dub✅ சீக்கிரம் தங்கத்தை தூக்கிட்டு வாங்கடா தமிழ் சினிமாக்கு. ஒருத்தர் குண்டா இருந்தா போதுமே சுற்றி இருக்க குஞ்சான்ஸ் எல்லாம் அட்வைஸ் பண்ணியே சாவடிப்பானுங்க. கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள். கதாநாயகி Fashion Designer படிப்பை படித்துக் கொண்டிருந்தவள். இப்போது சாதாரண Tailor வேலை செய்யும் நபராக இருக்கிறாள்.  கதாநாயகன் ஜவுளி கடையில் வேலை செய்கிறார். எப்ப வேண்டுமனாலும் வேலை போகலாம். கதாநாயகியின் குடும்பம் கதாநாயகன், மாமியார், மச்சான் ( சின்ன பையன்) இவங்க எல்லோரும் தான். மாமியார் கதாநாயகி குண்டா இருப்பாதல் மற்றும் குழந்தை இல்லாதல் எப்ப பாத்தாலும் வஞ்சிட்டே இருக்கும். கதாநாயகிக்கு இப்படி இருந்தாலும் Fashion நிகழச்சியில் கலந்து கொள்ள ஆசை இருக்கு. கதாநாயகி மற்ற நபர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறார்கள். அதை போலவே கதாநாயகியின் தோழிகளுக்கும் அவர்கள் வீட்டில் பிரச்சினைகள். அந்த சின்ன பையன் ஓரு நாள் கதாநாயகி Fashion பற்றி எழுதி வைத்திருந்ததை Translate செய்து Instagram பக்கத்தில்...

Lupin Part 1 & 2 Review

Image
Lupin 2 Parts 10 Episodes French - Action/Thriller Tamil Dub✅ செய்யாத குற்றத்திற்காக சிறை சென்ற கதாநாயகனின் தந்தை சிறையில் தற்கொலை கொள்கிறார். தந்தை குற்றவாளி இல்லை என்பதை தெரிந்து கொண்ட கதாநாயகன். தன்னுடைய தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கவும், அதற்கு காரணமான நபர்களை பழிவாங்க நினைக்கும் கதாநாயகன். கதையின் நாயகன் கொள்ளை அடிப்பதில் வல்லவன். கதாநாயனுக்கு லூபான் (Lupin) எனும் கொள்ளை அடிக்கும் கதாபாத்திரத்தை அதிகமாக பிடிக்கும். திருட்டு அதுவும் ஒரு கலை. கதாநாயகன் திருமணமாகி மகன் மற்றும் மனைவியை பிரிந்து வாழ்கிறான். எந்த நகை திருடப்பட்டதாக கூறி கதாநாயகனின் தந்தை கைது செய்தார்களோ அதை நகை ஏழத்திற்கு வருகிறது. இந்நிலையில் அந்த நகையை கதாநாயகன் பணம் தர வேண்டிய நபர்களுடன் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறான். கதாநாயகன் செய்த ஒரு சில சம்பங்கள் யார் என்பது காவல் அதிகாரிகளுக்கு தெரியததால் அதனை கண்டுபிடிக்க விசாரணை செய்ய தொடங்குகிறார்கள். மறுபக்கம் வில்லன் யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறான். கதாநாயகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகையை கொள்ளை அடித்தானா? கொள்ளை அடிப்பதற்கான ...

Still Time - 2022 aka ERA ORA

Image
Still Time - 2022 aka ERA ORA Italian - Sci Fi Comedy/Drama English Dub✅ Tamil Dub❌ ஒருத்தன் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும் போது எல்லாம் ஒரு வருடம் ஒரே நாளில் கடந்து போனால் எப்படி இருக்கும். அது வரம் என்பதா சாபம் என்பதா எதை தான் எடுத்துக்கொள்ளவது. இது தான் கதாநாயகனின் நிலைமையும். படத்தோட கதாநாயகன் மற்றும் கதாநாயகியும் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். கதாநாயகன் வேலை செய்யும் நிறுவனம் ஒவர் டைம் வேலை செய்வதால் எப்போதும் பிசியாக இருப்பார். கதாநாயகி ஒரு ஆர்டிஸ்ட். கதாநாயகன் தன்னுடைய 40 வது பிறந்தநாளை கதாநாயகி உடன் கொண்டா அன்று இரவு அன்றும் இருவருக்கும் நடக்க வேண்டியது நடக்கிறது. காலையில் எழுந்து கதாநாயகன் கதாநாயகியை பார்த்தால் கர்ப்பிணியா இருக்கிறாள். கதாநாயகன் அதிர்ச்சி அடைய அடுத்த நாள் எழுந்து பார்த்தா கதாநாயகிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அடுத்தடுத்த நாளில் ஓரு  வருடத்தை ஒரே நாளில் கடந்துவந்து இருப்பதையும்,  தனக்கு நடக்கும் இந்த மாதிரியான சம்பவங்கள் யாருக்கும் தெரியாது என்பதையும் உணர்கிறான். கதாநாயகன் ஒவ்வொரு நாளும் கடக்கும் போது ஒரு வருடத்தை கடக்கிறான்....

Satyaprem Ki Katha - 2023

Image
Satyaprem Ki Katha - 2023 Hindi - Romance/Drama Tamil Dub🚫 காதலிப்பவர்களும் கல்யாணம் செய்து கொண்டவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தோட கதாநாயகன் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த வேலை வெட்டி இல்லாதவன். இதனால் இவருக்கு யாரும் பெண் தரமாட்டுறாங்க. கதாநாயகனுக்கு அப்பா, அம்மா, தங்கை எல்லாம் தான் குடும்பம். ஆனால் இவருக்கு அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. அப்படி இருக்கும் போது கதாநாயகன் கதாநாயகியை விழா ஒன்றில் சந்திக்கிறான். கதாநாயகி எனக்கு ஏற்கனவே Boy Friend (காதலன்) இருப்பதாக கதாநாயகனிடம் சொல்கிறாள். இந்நிலையில் ஒரு வருடம் கழித்து கதாநாயகன் கதாநாயகியை அதே இடத்தில் பார்க்கிறான். கதாநாயகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்ய இருக்கும் கதாநாயகியை காப்பாற்றுகிறான். ஆனால் மனம் உடைந்து இருக்கும் கதாநாயகிக்கு கதாநாயகன் காப்பாற்றியதில் உடன் பாடில்லை. கதாநாயகியின் அப்பா ஒரு மிகப்பெரிய பணக்காரர். தன்னுடைய பெண்ணை காப்பாற்றிய கதாநாயகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். கதாநாயகிக் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. திருமணம் செய்து ...

Who is Erin Carter - 2023 Season 1

Image
Who is Erin Carter - 2023 English - Action / Drama | S1 - Ep 07 Tamil Dub✅ "Welcome To The வஞ்சப்புகழ்ச்சி அணி World மாமே".😉😁 இருக்கு சம்பவம் கடைசில இருக்கு. ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில் வந்த இரு கொள்ளையர்களில் ஒருவர் கதாநாயகி தாக்கியதால் மருத்துவ மனைக்கு கொண்ட செல்லப்படுகிறான். அந்த மருத்துவ மனையில் தான் கதாநாயகியின் கணவன் வேலை செய்கிறான். இந்நிலையில் அந்த கொள்ளையடிக்க வந்தவன் சிகிச்சை பலனின்றி இறக்கிறான். கொள்ளையடிக்க வந்தவனுக்கு கதாநாயகி யார் என்பது தெரிந்து இருக்கு. சூப்பர் மார்க்கெட்டில் நடந்த சம்பவம் செய்தியில் வர கதாநாயகி பதற்றம் அடைகிறாள். அதற்கு பிறகு கதாநாயகி மற்றும் கதாநாயகியின் மகளையும் தேடி ஒரு பெண் வருகிறாள். இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் கதாநாயகி அந்த பெண்ணை கொன்றுவிடுகிறாள். அந்த இடத்திற்கு வந்த கணவனின் நண்பனா போலீஸ் கதாநாயகி உடன் இனணந்து இறந்த பெண்ணை புதைத்து விடுகின்றார்கள். இதனை வைத்து அந்த போலீஸ் தனக்கு ஒரு உதவி தேவை அதை உன்னால் மட்டும் தான் செய்ய முடியும் என கேட்கிறான். கதாநாயகி உதவி செய்ய போக அந்த உதவிவே இருவருக்கும் உபத்தரமாக மாறுக...