Iraivan - 2023
#Iraivan - 2023
படத்தோட கதாநாயகன் ஜெயம் ரவி மற்றும் நரேன் இருவரும் காவலர்கள் மற்றும் நண்பர்கள். நரேனின் தங்கையாக வருபவள் கதாநாயகி நயன்தாரா படத்துக்கு தேவை இல்லாத ஆணி.
கதாநாயகன் எதை செய்தாலும் அதற்கு ஆதர்வு தரும் நபர் நண்பன் நரேன். இந்நிலையில் சென்னையில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கில்லர் யாரு என்பதை கண்டுபிடிக்க தடுமாறும் கதாநாயகன். ஒருகட்டத்தில் கில்லரை பிடிக்க சென்ற போது நரேன் இறந்துவிடுகிறார்.
நண்பன் இறந்ததற்கு காரணமே தான் தான் என்ற விரக்தியில் வேலையை விட்டுவிடுகிறார் கதாநாயகன்.
சீரியல் கில்லர் இறந்ததாக நினைக்கும் வேலையில் மீண்டும் அதே பாணியில் கொலைகள் நடக்கின்றது.
கில்லர் இந்த முறை கதாநாயகனுக்கு கடிதம் அனுப்புகிறான். கில்லர் கடிதம் அனுப்ப காரணம் என்ன? இருவருக்கும் இடையே உள்ள தொடர் என்ன? சீரியல் கில்லரை பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
எதுக்கு இந்த வேலை கொடூரமான காட்சிகள் மற்றும் இருந்தா படம் வெற்றி பெருமா என்ன?
அதற்கு சரியான கதை மற்றும் திரைக்கதை இரண்டும் இல்லாமல் எப்படி வெற்றி பெரும்.
படத்தின் கதைக்கு காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் தேவைவே இல்லை. அப்புறம் ஏன் வழிய திணிக்க வேண்டும்.
My Rating : ⭐.75/5