Posts

Showing posts with the label Crime

The Equalizer - 2014

Image
The Equalizer - 2014 English - Crime Action/Thriller Tamil Dub❌ முன்னாள் Marine மற்றும் Defence Intelligence Agency அதிகாரியாக இருந்த படத்தோட கதாநாயகன் ஒய்வுபெற்ற பிறகு பாஸ்டன் நகரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஹார்டுவேர் கடையில் பணிபுரியும் கதாநாயகன் சக ஊழியரான பெண்ணின் திருமண மோதிரத்தையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற நபரிடமிருந்து பொருளை மீட்டு கொண்டுவருகிறார். ஆனால் கதாநாயகன் தான் செய்யும் உதவிகளை மற்றவர்களுக்கு யார் என்பது தெரியாவண்ணம் செய்கிறார். இரவில் தூக்கம் வரமால் இருப்பதால் அதிகமான நேரம் புத்தகம் படிப்பதும், பக்கத்தில் இருக்கும் கபேவில் நேரத்தை கழிப்பதுமாக இருக்கிறார். அதை போல கபேவிற்கு வரும் இளம்பெண் நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். அந்த இளம்பெண் தான் ஒரு பாடகியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் ஆனால் இப்போது விபச்சாரியாக இருப்பதாக கூறி CD கேஸட் ஒன்றை கதாநாயகனிடம் தருகிறாள். வழக்கம் போல் அந்த இளம்பெண் வருகைக்கு காத்திருக்கும் கதாநாயகன் அன்று அவள் இரஷ்யன் மாபியா கும்பலை சேர்ந்த நபரால் கடினமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக ...

The Equalizer 2 - 2018

Image
The Equalizer 2 - 2018 English - Crime Action/Thriller Tamil Dub✅ Equalizer பட வரிசையில் வந்த 2 வது படமாகும். கதாநாயகன் Marine மற்றும் DIA பிரிவுகளில் பணியாற்றியவர். படத்தோட ஆரம்பத்தில் இரயிலில்  கடத்தப்படும் ஒரு குழந்தையை கதாநாயகன் ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறார். கால் டேக்ஸி ஒட்டுநனராக இருந்துக்கொண்டே தன்னுடன் DIA வில்  பணியாற்றிய பெண் மோழியின் உதவியுடன் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். அதே சமயம் கதாநாயகன் வசித்து வரும் பகுதியில் ஒரு வாலிபன் தவறான பாதையில் செல்கிறான். ஒரு நாள் கதாநாயகனின் பெண் தோழி இறந்துவிடுகிறாள். ஆரம்பத்தில் பெண் தோழி இறந்ததற்கு காரணம் கொள்ளையாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் கதாநாயன் இது ஒரு திட்டமிட்ட கொலை என முடிவு செய்கிறான். அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறார். கதாநாயகனின் பெண் தோழி இறந்ததற்கு காரணம் என்ன? அந்த இறப்பிற்கு பின்னால் இருப்பது யார்? கதாநாயகன் தவறான வழியில் செல்லும் வாலிபனை மீட்டாரா? கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. தலைவன் Denzel Washington எப்பவும் தனி ரகம் தான்.ம...

Raththam - 2023

Image
Raththam - 2023 Tamil - Crime/Drama பிரசவத்தின் போது மனைவி இறந்ததற்க்கு தான் காரணம் என்கிற மனநிலையில் இருக்கும் கதாநாயகன். கதாநாயகன் சென்னையில் செய்து கொண்டு இருந்த புலனாய்வு பத்திரிகை வேலையை விட்டு மகளுடன் கொல்கத்தாவிற்கு சென்றுவிடுகிறார். நாளடைவில் குடிக்கு அடிமையாகி விடுகிறார். இந்நிலையில் கதாநாயகன் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் பத்திரிக்கையாளரும், நண்பருமான நிழல்கள் ரவின் மகன் கொலை செய்யப்படுகிறார். நிழல்கள் ரவி கேட்டுக்கொண்ட காரணத்தால் மீண்டும் அந்த பத்திரிக்கை நிறுவனத்தில் சேர்கிறார் கதாநாயகன். கதாநாயகன் நண்பன் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க தொடங்கும் போது சில கொலைகள் நடக்கின்றது. நடக்கும் கொலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதாக கதாநாயகன் கண்டுபிடிக்கிறார். அந்த கும்பல் யார்? அவர்கள் கொலை செய்வதற்கான காரணம் என்ன? அதன் பிண்ணனியில் இருப்பது யார்? கதாநாயகயன் இறுதியில் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. அண்ணே ஆண்டனி அண்ணே ஒரு நல்லா கதையை தேர்ந்தெடுத்து நடிங்க சத்தியமா முடியல. இயக்குநர் கதை நன்றாக எழுதி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கவனம் ச...

Enakku Endey Kadaitathu - 2023

Image
Enakku Endey Kidaiyaathu - 2023🔞 Tamil - Crime/Thriller படத்தோட கதாநாயகன் கால் டாக்ஸி ஓட்டுநர் வேலை செய்பவர். ஒருநாள் இரவு பாரில் இருந்து வந்த பெண் கதாநாயகனின் காரில் ஏறுகிறாள். அந்த பெண் கதாநாயகனை வீட்டிற்கு சரக்கு அடிக்க வர சொல்கிறார்கள். கதாநாயகன் அந்த பெண் சொன்னதை கேட்டு வீட்டுக்கு செல்கிறான். இருவரும் சரக்கு எல்லாம் (எல்லாமும் தான்) சாப்பிட்ட பிறகு கதாநாயகன் பாத்ரூம் போகும் போது பக்கத்து அறையில் பிணம் இருப்பதை பார்க்கிறான். அந்த வீட்டில் இருந்து கதாநாயகன் தப்பிக்க முயற்சி செய்கிறான். ஆனால் அந்த வீட்டில் Finger Print சென்சார் லாக் இருப்பதால் கதாநாயகனால் தப்பிக்க முடியவில்லை. இதனை அந்த பெண் பார்த்து விட இருவருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு காரணமாக மயங்கி விழுகிறாள். அப்போது அந்த வீட்டில் கொள்ளை அடிக்க திருட ஒருவன் வருகிறான். வந்த அந்த திருடனுக்கு ஆனது என்ன? அந்த வீட்டில் இறந்தவர் யார்? அவர் இறந்தற்க்கான காரணம் என்ன? இறுதியில் கதாநாயகன் அந்த வீட்டில் இருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இயக்குநர் தான் படத்தோட கதாநாயகன் நன்றாக நடித்துள்ளார். திரைகதை விற...

The Road - 2023

Image
The Road - 2023 Tamil - Crime/Thriller படத்தோட கதாநாயகி (த்ரிஷா) கணவன் மற்றும் மகனுடன் மகிழ்ச்சி ஆக வாழ்ந்து வருகிறார். காரில் வெளியூர் சென்ற கணவன் மற்றும் மகன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு வரும் கதாநாயகி அங்கே இதே போன்ற பல விபத்து நடப்பதை பற்றி தெரிந்து கொள்கிறாள். இன்னொரு பக்கம் கல்லூரியில் பேராசிரியர் ஆக இருக்கும் மாயன் (Dancing Rose Shabeer) மீது மாணவி தந்த போலியான பாலியல் குற்றச்சாட்டால் பணி நீக்கம் செய்யப்படுகிறார். பிறகு மாயன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன? கதாநாயகி நடந்த விபத்துகளை பற்றி விசாரிக்க தொடங்கிறாள். இறுதியில் விபத்து எப்படி நடந்தது? விபத்துகள் நடக்க காரணம் என்ன? இருவருக்கும் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதி கதை. படத்தோட முதல் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி காட்சிகளை நறுக்கி இருந்தால் விறுவிறுப்பான படமாக வந்து இருக்கும். இரண்டாம் பாதி தரமாக இருந்தது படத்தின் நீளம் தான் இந்த ரோட் படத்திற்கான வேகத்தடை. பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராலமா திரையரங்கு சென்று பாரக்கலாம். My Rating : ⭐⭐.75/5

Fight Against Evil 2021

Image
Fight Against Evil - 2021 Chinese - Action Crimes/Drama Tamil Dub❌ போலீஸ் அதிகாரியான படத்தோட கதாநாயகன் மனைவியுடன் புத்தாண்டை கொண்ட ஊருக்கு செல்கிறார். ஏற்கனவே அந்த ஊரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் உள்ளூர் மக்களை மிரட்டி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கும்பல் ஆன்லைன் சூதாட்டத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மேலும் அந்த கும்பல் அங்கே இருக்கும் வசதிபடைத்தை நபர்களை தனது ஆன்லைன் சூதாட்டத்தில் மிரட்டி சேர்த்து கொள்கிறார்கள். பணத்தை சூதாட்டத்தில் சூழ்ச்சியால் இழந்து அந்த கும்பலுக்கு பயந்து ஏதும் செய்ய முடியாமல் இருக்கும் உள்ளூர் மக்களில் ஒருவர் கதாநாயகனின் மாமனார். இதனை தெரிந்து கொண்ட கதாநாயகன் அந்த கும்பலை எதிர்க்க முடிவு செய்கிறான். அதனால் கதாநாயகன் உள்ளுர் காவல்துறையினர் உடன் இணைந்து செயல் பட விரும்புகிறார். கதாநாயகன் நினைத்தப்படி உள்ளுர் காவல்துறையினர் உடன் இணைந்து செயல்பட்டாரா? இல்லையா? கதாநாயகன் தொடங்கிய விசாரணை என்ன ஆனது? அந்த கும்பலால் கதாநாயகனுக்கு வந்து பிரச்சனைகள் என்ன? இறுதியில் கதாநாயகன் நினைத்தப்படி எல்லாம் நடந்தத...

Beasts Clwaing at Straws - 2020

Image
Beasts Clawing at Straws - 2020 Korean - Neo Noir Crime/Thriller Tamil Dub❌ படத்தில் வரும் கதாபாத்திரங்களில் முக்கியமான மூன்று கதாபாத்திரங்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாக சொல்லுறேன். ஆரம்பத்தில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதே சமயம் ஒருவருக்கு சாலை விபத்து நடந்ததாகவும் செய்தி ஒளிப்பரப்பாகிறது. படத்தோட ஒரு கதாநாயகன் ஜங்மேன் பாத் ஹவுஸ்யில் வேலை செய்யும் ஏழ்மையில் வாழும் குடும்பமான இவருக்கு அம்மா, மனைவி, மகள் உள்ளார்கள். அம்மாவுக்கு மருத்துவ செலவு மற்றும் மகளுக்கு பள்ளி கூட Fees கட்டவேண்டிய நிலைமை. சுங்க அதிகாரியான இன்னொரு கதாநாயகன் டேயாங்-க்கு காதலியுடன் ஒரளவு வசதியான வாழ்க்கை வாழ ஆசை. அதனால் வட்டிக்கு பணத்தை வாங்கி காதலியிடம் தருகிறான். ஆனால் காதலி பணத்தை எடுத்து கொண்டு போய்விட கதாநாயகனுக்கு பணம் தந்த நபர் பணத்தை திருப்பி தர கால அவகாசம் தருகிறான். தரவில்லை என்றால் கதாநாயகனுக்கு அது தான் கடைசி நாள் என்பதை போல மிரட்டுகிறான். இன்னொரு முக்கிய கதாபாத்திரமான கதாநாயகி மிரான் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுகிறார். இந்நிலையில் கதாநாயகி மிரான்-க்கு இன்னொரு ந...

Chittha - 2023

Image
Chiththa - 2023 படத்தோட கதாநாயகன் பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளர் வேலை செய்யும் நபர். அதே நேரத்தில் கதாநாயகனின் முன்னாள் காதலியான கதாநாயகியும் வேலை செய்கிறாள். கதாநாயகனின் அண்ணன் இறந்து விட அவரது மகளை தன் மகளாக அதீத பாசம் வைத்து வளர்க்கிறார். அந்த பெண் தன்னுடைய சித்தாப்பாவை சித்தா என்று அழைக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே பாச பிணைப்பு உள்ளது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் காவல் துறையினாரால் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட கதாநாயகன் குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்படுகிறார். கதாநாயன் வெளியே வரும் வேளையில் தன்னுடைய அண்ணன் காணாமல் போகிறாள். கதாநாயகன் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கதாநாயகனின் அண்ணன் மகளை கடத்த யார்? கடத்தியதிற்கான காரணம் என்ன? அந்த பெண் குழந்தைக்கு நடந்தது என்ன? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படம் நல்லா இருக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். இந்த காலகட்டத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். என்னை பொறுத்தவரை குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்களை விட ஆண் பிள்ளைகளை பெற்றவர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படத்தில் நடித்த ...

Iraivan - 2023

Image
#Iraivan - 2023 படத்தோட கதாநாயகன் ஜெயம் ரவி மற்றும் நரேன் இருவரும் காவலர்கள் மற்றும் நண்பர்கள். நரேனின் தங்கையாக வருபவள் கதாநாயகி நயன்தாரா படத்துக்கு தேவை இல்லாத ஆணி. கதாநாயகன் எதை செய்தாலும் அதற்கு ஆதர்வு தரும் நபர் நண்பன் நரேன். இந்நிலையில் சென்னையில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கில்லர் யாரு என்பதை கண்டுபிடிக்க தடுமாறும் கதாநாயகன். ஒருகட்டத்தில் கில்லரை பிடிக்க சென்ற போது நரேன் இறந்துவிடுகிறார். நண்பன் இறந்ததற்கு காரணமே தான் தான் என்ற விரக்தியில் வேலையை விட்டுவிடுகிறார் கதாநாயகன். சீரியல் கில்லர் இறந்ததாக நினைக்கும் வேலையில் மீண்டும் அதே பாணியில் கொலைகள் நடக்கின்றது. கில்லர் இந்த முறை கதாநாயகனுக்கு கடிதம் அனுப்புகிறான். கில்லர் கடிதம் அனுப்ப காரணம் என்ன? இருவருக்கும் இடையே உள்ள தொடர் என்ன? சீரியல் கில்லரை பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. எதுக்கு இந்த வேலை கொடூரமான காட்சிகள் மற்றும் இருந்தா படம் வெற்றி பெருமா என்ன? அதற்கு சரியான கதை மற்றும் திரைக்கதை இரண்டும் இல்லாமல் எப்படி வெற்றி பெரும். படத்தின் கதைக்கு கா...

Friday Night Plan - 2023

Image
Friday Night Plan - 2023 Hindi - Teenage Comedy/Drama Tamil Dub✅ அண்ணன் தம்பி இவனுங்களுக்கு இடையே எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு பஞ்சாயத்து இருந்துட்டே இருக்கும். ஒரு நாள் இவங்க அம்மா தொழில் சம்பந்தமா ஊருக்கு போறாங்க. அன்று பள்ளியில் நடக்குற கால் பந்து போட்டியில் அவனே எதிர்பாராத விதமாக ஆட்டத்தில் கலந்து கொள்ள நேர்கிறது. ஆட்டத்தில் Goal அடித்து தன்னுடைய அணியை வெற்றி பெறச் செய்கிறான். அதற்கு பிறகு பள்ளியில் வெத்தா இருந்தவன் ஒவர் நைட்ல ஒபாமா ஆகிட்டான். சக மாணவர்கள் பார்ட்டிக்கு வர சொல்லி அழைக்கிறார்கள். இருவரும் இணைந்து அம்மாவுக்கு தெரியாமல் பார்ட்டிக்கு போகிறார்கள். "தம்பிவுடையான் படைக்கு அஞ்சான்" சொல்லுவாங்க ஆன வர எல்லா பிரச்சனைக்கும் அவன் தான் காரணம். பார்ட்டிக்கு சென்றயிடத்தில் தம்பிகாரன் செய்த சேட்டையால் பிரச்சினை வர இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. அம்மா வீட்டிற்கு வருவதற்குள் இருவரும் பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? இருவருக்கும் இடையிலான மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. படம் நல்லா காமெடியா இருக்கு. ஒருமுறை பார்க்கலாம். My Rating : ⭐⭐.75...

Mark Antony - 2023

Image
MarkAntony - 2023 Tamil - Scifi Action Comedy வக்காளி 🔥🔥 ஒரே சீன் தான் ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிருது மாமே.  தன்னுடைய அம்மாவை கொன்ற ஆண்டனி அப்பாவை (விஷால்) வெறுக்கும் மகன் மார்க் (விஷால்). மகன் விஷாலை எடுத்து வளர்க்கும் அப்பா ஜாக்கி பாண்டியன் (SJ சூர்யா) பெரிய டான். ஆண்டனி மற்றும் ஜாக்கி பாண்டியன் இருவரும் நண்பர்கள். அப்பா ஜாக்கி பாண்டியனுக்கு மதன் பாண்டியன் (SJ சூர்யா) என்கிற மகன் இருக்க மார்க் மீது அதீத அக்கறை காட்டுவதால் அப்பாவை கொல்ல நினைக்கிறான். அப்பா ஆண்டனி இறந்தும் ஊர் மக்களால் கொலைகாரனின் மகன் மார்க் என சொல்கிறார்கள். இதனால் மார்க் காதலுக்கு காதலின் குடும்பத்தாரிடம் இருந்து சிக்கல் வருகிறது. அப்போது மார்க்க்கு கிடைத்த டைம் டிராவல் போன் மூலமாக அம்மாவை தொடர்பு கொள்ள அப்பா ஆண்டனி ரொம்ப நல்லவர் என சொல்கிறாள். அதற்கு பின்னால் மார்க் அப்பா நல்லவர் என அம்மா சொல்ல காரணம்? அப்பா அம்மா இருவருக்கும் உண்மையில் நடந்தது என்ன? ஜாக்கி பாண்டியன் மார்க் மீது அக்கறை காட்டுவது ஏன்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தை ஒத்த ஆளா நின்னு சம்பவம் பண்ணது தலைவன் SJ சூர்யா தான். 🔥🔥...

Lupin Part 1 & 2 Review

Image
Lupin 2 Parts 10 Episodes French - Action/Thriller Tamil Dub✅ செய்யாத குற்றத்திற்காக சிறை சென்ற கதாநாயகனின் தந்தை சிறையில் தற்கொலை கொள்கிறார். தந்தை குற்றவாளி இல்லை என்பதை தெரிந்து கொண்ட கதாநாயகன். தன்னுடைய தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கவும், அதற்கு காரணமான நபர்களை பழிவாங்க நினைக்கும் கதாநாயகன். கதையின் நாயகன் கொள்ளை அடிப்பதில் வல்லவன். கதாநாயனுக்கு லூபான் (Lupin) எனும் கொள்ளை அடிக்கும் கதாபாத்திரத்தை அதிகமாக பிடிக்கும். திருட்டு அதுவும் ஒரு கலை. கதாநாயகன் திருமணமாகி மகன் மற்றும் மனைவியை பிரிந்து வாழ்கிறான். எந்த நகை திருடப்பட்டதாக கூறி கதாநாயகனின் தந்தை கைது செய்தார்களோ அதை நகை ஏழத்திற்கு வருகிறது. இந்நிலையில் அந்த நகையை கதாநாயகன் பணம் தர வேண்டிய நபர்களுடன் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறான். கதாநாயகன் செய்த ஒரு சில சம்பங்கள் யார் என்பது காவல் அதிகாரிகளுக்கு தெரியததால் அதனை கண்டுபிடிக்க விசாரணை செய்ய தொடங்குகிறார்கள். மறுபக்கம் வில்லன் யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறான். கதாநாயகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகையை கொள்ளை அடித்தானா? கொள்ளை அடிப்பதற்கான ...