Mark Antony - 2023

MarkAntony - 2023
Tamil - Scifi Action Comedy

வக்காளி 🔥🔥 ஒரே சீன் தான் ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிருது மாமே. 
தன்னுடைய அம்மாவை கொன்ற ஆண்டனி அப்பாவை (விஷால்) வெறுக்கும் மகன் மார்க் (விஷால்). மகன் விஷாலை எடுத்து வளர்க்கும் அப்பா ஜாக்கி பாண்டியன் (SJ சூர்யா) பெரிய டான். ஆண்டனி மற்றும் ஜாக்கி பாண்டியன் இருவரும் நண்பர்கள். அப்பா ஜாக்கி பாண்டியனுக்கு மதன் பாண்டியன் (SJ சூர்யா) என்கிற மகன் இருக்க மார்க் மீது அதீத அக்கறை காட்டுவதால் அப்பாவை கொல்ல நினைக்கிறான்.

அப்பா ஆண்டனி இறந்தும் ஊர் மக்களால் கொலைகாரனின் மகன் மார்க் என சொல்கிறார்கள். இதனால் மார்க் காதலுக்கு காதலின் குடும்பத்தாரிடம் இருந்து சிக்கல் வருகிறது.

அப்போது மார்க்க்கு கிடைத்த டைம் டிராவல் போன் மூலமாக அம்மாவை தொடர்பு கொள்ள அப்பா ஆண்டனி ரொம்ப நல்லவர் என சொல்கிறாள்.

அதற்கு பின்னால் மார்க் அப்பா நல்லவர் என அம்மா சொல்ல காரணம்? அப்பா அம்மா இருவருக்கும் உண்மையில் நடந்தது என்ன? ஜாக்கி பாண்டியன் மார்க் மீது அக்கறை காட்டுவது ஏன்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை ஒத்த ஆளா நின்னு சம்பவம் பண்ணது தலைவன் SJ சூர்யா தான். 🔥🔥🔥👍

பேசாம  4 கதாபாத்திரத்தையும் SJ சூர்யாவே பண்ணியிருக்கலாம். விஷால் ஏதோ அவரால முடிந்ததை செய்து இருக்கார். 

இந்த வாரம் குடும்பத்தோடு திரையரங்கு சென்று பார்க்க கூடிய படம். 

பழைய பாடல்கள் எல்லாம் Remix பண்ணது அதுவா சரியா பயன்படுத்தியது எல்லாம் தரம்.  இந்த படம் அனைவருக்கும் பிடிக்குமா என்று தெரியாது.

My Rating : ⭐⭐⭐/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023