Shit Boot Three - 2023
Shot Bhot Three - 2023 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் IT கம்பெனியில் பணிபுரியும் தம்பதிகளான கதாநாயகன் கதாநாயகி இருவருக்கும் மகன் (கைலாஷ்) ஒருவன் இருக்கிறான். கைலாஷிற்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் தனிமையை உணர்கிறான். இதனால் நாய் ஒன்றை வளர்க்க பெற்றோரிடம் கேட்க கதாநாயகி மறுக்கிறார். இதனை தெரிந்து கொண்ட நண்பரகள் கைலாஷ் பிறந்த நாள் பரிசாக நாயை (மேக்ஸ்) பரிசாக தருகிறார்கள். ஆரம்பத்தில் நாயை வெறுக்கும் கதாநாயகி நாளடைவில் ஏற்றுக்கொள்கிறாள். இந்நிலையில் கைலாஷ் பெற்றோர்களான (சினேகா, வெங்கட் பிரபு) இருவரும் வெளியூர் செல்கிறார்கள். அந்நேரத்தில் கைலாஷ் வளர்த்த Max காணாமால் போகிறது. பெற்றோர்களுக்கு தெரியாமல் காணாமல் போன மேக்ஸினை கண்டுபிடிக்க கைலாஷ் மற்றும் மூன்று நண்பர்களும் செல்கிறார்கள். காணாமல் போன நாயினை தேட 4 சிறுவர்கள் ஆரம்பிக்கிறார்கள். நாயை தேடிச்சென்ற 4 சிறுவர்களுக்கு என்ன ஆனது? இறுதியில் 4 சிறுவர்கள் நாயை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். இது முற்றிலும் குழந்தைகளுக்கான படம். இயக்குநர் இன...