Enakku Endey Kadaitathu - 2023

Enakku Endey Kidaiyaathu - 2023🔞
Tamil - Crime/Thriller

படத்தோட கதாநாயகன் கால் டாக்ஸி ஓட்டுநர் வேலை செய்பவர். ஒருநாள் இரவு பாரில் இருந்து வந்த பெண் கதாநாயகனின் காரில் ஏறுகிறாள்.


அந்த பெண் கதாநாயகனை வீட்டிற்கு சரக்கு அடிக்க வர சொல்கிறார்கள். கதாநாயகன் அந்த பெண் சொன்னதை கேட்டு வீட்டுக்கு செல்கிறான்.

இருவரும் சரக்கு எல்லாம் (எல்லாமும் தான்) சாப்பிட்ட பிறகு கதாநாயகன் பாத்ரூம் போகும் போது பக்கத்து அறையில் பிணம் இருப்பதை பார்க்கிறான். அந்த வீட்டில் இருந்து கதாநாயகன் தப்பிக்க முயற்சி செய்கிறான்.

ஆனால் அந்த வீட்டில் Finger Print சென்சார் லாக் இருப்பதால் கதாநாயகனால் தப்பிக்க முடியவில்லை. இதனை அந்த பெண் பார்த்து விட இருவருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு காரணமாக மயங்கி விழுகிறாள்.

அப்போது அந்த வீட்டில் கொள்ளை அடிக்க திருட ஒருவன் வருகிறான். வந்த அந்த திருடனுக்கு ஆனது என்ன? அந்த வீட்டில் இறந்தவர் யார்? அவர் இறந்தற்க்கான காரணம் என்ன? இறுதியில் கதாநாயகன் அந்த வீட்டில் இருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

இயக்குநர் தான் படத்தோட கதாநாயகன் நன்றாக நடித்துள்ளார். திரைகதை விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் கதையில் கொஞ்சம் தடுமாறுகிறார்.

கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு கட்டாயம் இந்த படம் பிடிக்கும். படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது.

My Rating : ⭐⭐⭐/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023