Chittha - 2023

Chiththa - 2023

படத்தோட கதாநாயகன் பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளர் வேலை செய்யும் நபர். அதே நேரத்தில் கதாநாயகனின் முன்னாள் காதலியான கதாநாயகியும் வேலை செய்கிறாள்.

கதாநாயகனின் அண்ணன் இறந்து விட அவரது மகளை தன் மகளாக அதீத பாசம் வைத்து வளர்க்கிறார். அந்த பெண் தன்னுடைய சித்தாப்பாவை சித்தா என்று அழைக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே பாச பிணைப்பு உள்ளது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் காவல் துறையினாரால் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட கதாநாயகன் குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்படுகிறார்.

கதாநாயன் வெளியே வரும் வேளையில் தன்னுடைய அண்ணன் காணாமல் போகிறாள். கதாநாயகன் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கதாநாயகனின் அண்ணன் மகளை கடத்த யார்? கடத்தியதிற்கான காரணம் என்ன? அந்த பெண் குழந்தைக்கு நடந்தது என்ன? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படம் நல்லா இருக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். இந்த காலகட்டத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். என்னை பொறுத்தவரை குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்களை விட ஆண் பிள்ளைகளை பெற்றவர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

படத்தில் நடித்த பெண் குழந்தைகளின் நடிப்பு என்பதே போலவே இல்லை. சித்தார்த் மற்றும் கதாநாயகி இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.

படத்தில் மற்ற துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்களின் நடிப்பு படத்திற்கு மேலும் பலம்.

வசனங்கள் நன்றாக இருந்தது. பிண்ணனி இசை தேவையான இடத்தில் நன்றாக அமைத்து உள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்.

படத்தோட இயக்குநர் முதல் பாதியில் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

My Rating : ⭐⭐⭐.5/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023