The Equalizer - 2014
The Equalizer - 2014 English - Crime Action/Thriller Tamil Dub❌ முன்னாள் Marine மற்றும் Defence Intelligence Agency அதிகாரியாக இருந்த படத்தோட கதாநாயகன் ஒய்வுபெற்ற பிறகு பாஸ்டன் நகரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஹார்டுவேர் கடையில் பணிபுரியும் கதாநாயகன் சக ஊழியரான பெண்ணின் திருமண மோதிரத்தையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற நபரிடமிருந்து பொருளை மீட்டு கொண்டுவருகிறார். ஆனால் கதாநாயகன் தான் செய்யும் உதவிகளை மற்றவர்களுக்கு யார் என்பது தெரியாவண்ணம் செய்கிறார். இரவில் தூக்கம் வரமால் இருப்பதால் அதிகமான நேரம் புத்தகம் படிப்பதும், பக்கத்தில் இருக்கும் கபேவில் நேரத்தை கழிப்பதுமாக இருக்கிறார். அதை போல கபேவிற்கு வரும் இளம்பெண் நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். அந்த இளம்பெண் தான் ஒரு பாடகியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் ஆனால் இப்போது விபச்சாரியாக இருப்பதாக கூறி CD கேஸட் ஒன்றை கதாநாயகனிடம் தருகிறாள். வழக்கம் போல் அந்த இளம்பெண் வருகைக்கு காத்திருக்கும் கதாநாயகன் அன்று அவள் இரஷ்யன் மாபியா கும்பலை சேர்ந்த நபரால் கடினமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக ...