Mission Impossible Dead Reckoning Part One - 2023

English - SciFi Spy Action/Thriller
இரஷ்ய அரசாங்கம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவியான என்டிடி (Entity) வைத்துக்கொண்டு எந்தவொரு நாட்டின் இரகசியங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அந்நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் எல்லாவற்றையும், மொத்தமாக அந்த நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். Entity யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை வைத்து உலகத்தில் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்.
இந்நிலையில் அந்த Entity கருவியை மற்ற உலக நாடுகள் அடைய முயற்சி செய்கிறார்கள். ஆனால் Entity தன்னிச்சையாக செயல்பட தொடங்குகிறது.
படத்தோட கதாநாயகனுக்கு அந்த Entity கருவியை கண்டுபிடிக்கும் வேலையை IMF தருகிறது. இன்னொரு பக்கம் தன்னிச்சையாக செயல்பட தொடங்கிய Entity தனக்கான குழுவை தேர்ந்தெடுத்து திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
அந்த Entiya கருவியை கட்டுப்படுத்த ஒரே வழி இரு துண்டுகளாக இருக்கும் சாவி தான். அதனை தேடி கண்டுபிடிக்க கதாநாயகன் மற்றும் அவனது குழுவும் களத்தில் இறங்குகிறார்கள். மறுபுறம் அந்த Entity தனது குழுவை வைத்து கதாநாயகனுக்கு சிக்கலை உண்டாக்குகிறது.
Entity அடுத்தடுத்து உருவாக்கிய பிரச்சினைகள் என்ன? கதாநாயகனை Entity தடுக்க காரணம் என்ன? கதாநாயகன் இரு துண்டுகளாக இருக்கும் சாவியை கண்டுபிடித்தாரா? அந்த Entity இருக்கும் இடைத்தை தெரிந்து கொண்டாரா? Entity உருவாக்கும் பிரச்சனைகளில் இருந்து கதாநாயகன் குழுவினரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
என்ன மனுஷன் இன்னமும் அதே எனர்ஜீயோட இருக்காப்ல. நான் முதல் முறையா திரையரங்கில் பாக்குற படம் தலைவனோட Mission Impossible படம் தான்.
ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அதகளம். அதுவும் இந்த படத்தில் மலைமீது இருந்து பைக்யோட குதிக்கும் காட்சி எங்கே வரப்போகுது என்ற ஆவல் எனக்குள் அதிகமாவே இருந்துச்சி.
படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். VFX, SFX, ஒளிப்பதிவு எல்லாமே தரம்.
குடும்பத்தோடு அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க கூடிய படம். இதற்கு முன்னாடி வந்த Mission Impossible 6 பாகங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் இதில் வரும் கதாபாத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் முந்தைய பாகங்களை பார்க்கலாம்.
My Rating : ⭐⭐⭐.5/5