Talk To Me - 2023
TalkToMe - 2023 🔞
English - Supernatural Horror/Thriller
Tamil Dub❌
#MustWatch
முன்னாடியே சொல்லுறேன் படம் வெளியிட்டது A24 கம்பெனி கிறுக்கனுங்க சண்டை போட்டு Rights வாங்கி இருக்கானுங்க. அதை விட மோசமான கிறுக்கனுங்க படத்தோட 2 இயக்குநரும் மண்ட கோளாறு உள்ளவைங்க லூசு பசங்க.
இந்த 2 பேரும் Racka Racka இன்ற யூடூப் சேனலை நடந்திட்டு இருந்து இருக்காங்க. இதுல அதிசியம் என்ன இருக்கு அப்படின்னு கேட்பிங்க. அப்படி என்னதான் சேனல்ல இருக்குனு பார்த்தா இவனுங்க முழுநேர கிறுக்கனுங்களா மட்டும் இருந்து இருக்கானுவ.
இந்த Image பார்த்தா புரியும். ஆரம்பமே சம்பவம் பண்ணிட்டுதான் டைடில் வரும். அதனால் குடும்பத்தோடு பார்ப்பதை தவிர்க்கவும்.
படத்தோட கதாநாயகிக்கு அம்மா இல்லை. கதாநாயகியின் தோழியும், தோழியோட சகோதரன் இவங்க 2 பேரும் தான் முக்கியமான நண்பர்களே. மூவரும் ஓருநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள. அங்கே Talk To Me எனும் விளையாட்டை விளையாடுகிறார்.
அப்புறம் என்ன விளையாட்டு விபரீதமாகும்னு சொல்லுவங்க. அது போல தான் இவங்க விளையாட்டா பண்ணது வில்லங்கமா மாறி பிரச்சனைகள் வர தொடங்குகிறது. அந்த விளையாட்டால் வந்த பிரச்சனைகள் என்ன? அதில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் ரொம்ப பயமுறுத்துற மாதிரியான காட்சிகள் இருக்கும் என்று எல்லாம் நினைக்காதிங்க. ஆனால் இந்த படம் Horror Thriller ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.
இந்த படத்தோட முக்கியமான தூண் கதாநாயகி (Sophie Wilde) தான். வேற மாதிரி சம்பவம்.🔥
குறைந்த செலவில் நிறைவான படம். 2 Part வர போகுதாம்.
My Rating : ⭐⭐⭐.5/5