The Equalizer 2 - 2018

The Equalizer 2 - 2018
English - Crime Action/Thriller
Tamil Dub✅


Equalizer பட வரிசையில் வந்த 2 வது படமாகும். கதாநாயகன் Marine மற்றும் DIA பிரிவுகளில் பணியாற்றியவர். படத்தோட ஆரம்பத்தில் இரயிலில்  கடத்தப்படும் ஒரு குழந்தையை கதாநாயகன் ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறார்.

கால் டேக்ஸி ஒட்டுநனராக இருந்துக்கொண்டே தன்னுடன் DIA வில்  பணியாற்றிய பெண் மோழியின் உதவியுடன் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். அதே சமயம் கதாநாயகன் வசித்து வரும் பகுதியில் ஒரு வாலிபன் தவறான பாதையில் செல்கிறான்.

ஒரு நாள் கதாநாயகனின் பெண் தோழி இறந்துவிடுகிறாள். ஆரம்பத்தில் பெண் தோழி இறந்ததற்கு காரணம் கொள்ளையாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் கதாநாயன் இது ஒரு திட்டமிட்ட கொலை என முடிவு செய்கிறான்.

அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறார். கதாநாயகனின் பெண் தோழி இறந்ததற்கு காரணம் என்ன? அந்த இறப்பிற்கு பின்னால் இருப்பது யார்? கதாநாயகன் தவறான வழியில் செல்லும் வாலிபனை மீட்டாரா? கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

தலைவன் Denzel Washington எப்பவும் தனி ரகம் தான்.மற்ற நடிகர்களின் நடிப்பு நன்றாகவே இருந்தது.

Crime Thriller ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தான்.

My Rating : ⭐⭐⭐/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023