800 - 2023

800 - 2023
Tamil - Biopic Sports/Drama

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் குழந்தை பருவத்தில் இருந்து 800 விக்கெட் எடுத்தா காலகட்டம் வரை படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.


தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆங்கியேலயர்களால் அழைத்து சென்ற குடும்பங்களில் முத்தையா முரளிதரன் குடும்பம் ஒன்று.

அங்கே நடக்கும் பிரச்சனைகளுக்கு இடையே சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் முத்தையா முரளிதரனுக்கு இருக்கிறது.

அங்கே நடக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொண்டார்? இலங்கை கிரிக்கெட் அணியில் எப்படி சேர்ந்தார்? இலங்கை அணிக்கு விளையாடுவதால் அவர் சந்தித்த சிக்கல்கள் என்ன? கிரிக்கெட்டில் 800 விக்கெட் எப்போது எடுத்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். தலைவர் மேதகு பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்த நரேன் வரும் போது எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

படத்தில் இடம்பெற்ற காட்சிகள் எல்லாம் வைத்து பார்த்தால் இது தான் உண்மையும் உண்மையின் உண்மையா என்ன இதெல்லாம் மறைந்தவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்காக காலமெல்லாம் காத்திருப்பவருக்களுக்கும், அரசியல் கங்காணிகளுக்கும் தான் தெரியும்.

பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராலமா திரையரங்கு சென்று ஒருமுறை பார்க்கலாம்.

My Rating : ⭐⭐.75/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023