Irugapatru - 2023

Irugapatru - 2023
Tamil - Family/Drama

கணவன் மனைவி இருவருக்கும் இடையே வரும் சிறு சிறு பிரச்சனைகளையும் அதற்கான தீர்வை சொல்லும் படமாகவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இறுகப்பற்று.

மனநல ஆலோசகரான ஷ்ரதா ஸ்ரீநாத்-யும் விக்ரம் பிரபும் தம்பதிகள். இருவருக்கும் இடையே எந்தவொரு பிரச்சனைகள் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஷ்ரதா ஸ்ரீநாத்.

இன்னொரு தம்பதிகளான விதார்த் அபர்ணதி இருவருக்கும் ஓரு குழந்தையும் உள்ளது. அபர்ணதி குண்டாக இருப்பதால் அதிகமான வெறுப்பை காட்டும் விதார்த். இதனால் விவாகரத்து செய்ய முடிவு எடுக்கிறார்.

காதல் திருமணம் செய்துக்கொண்ட இன்னொரு தம்பதிகளான ஸ்ரீ மற்றும் சானியா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை போட்டு கொள்கிறார்கள்.

இந்த இரு தம்பதிகளின் பிரச்சனை மனநல ஆலோசகரான ஷ்ரதா ஸ்ரீநாத்யிடம் வருகிறது. ஒருகட்டத்தில் அதுவும் ஷ்ரதா மற்றும் விக்ரம் பிரபு இருவருக்கும் இடையே பிரச்சனை வர காரணமாகிறது.

ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் விக்ரம் பிரபு இருவருக்கும் இடையே பிரச்சனை வர காரணம் என்ன? ஷ்ரதா மற்ற இரு தம்பதிகளுக்கு கொடுத்த ஆலோசனை என்ன? இந்த மூன்று தம்பதிகளுக்கு இடையிலான பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்த அனைவரும் சரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். அதுவும் விதார்த் என்ன நடிப்புடா சாமி. அண்ணே சீக்கிரம் வெற்றிமாறன் கூட ஒரு படத்தை கொடுண்ணா.

இயக்குநர் சொல்ல வந்த கருத்தை கொஞ்சம் இல்லை ரொம்ப அதிகமாக இறுக்கி சொல்லிட்டார். படத்தோட நீளத்தை நறுக்கி இருந்தா இறுகப்பற்று இன்னும் இனிமையா இருந்து இருக்கும்.

அனைவருக்கும் பிடிக்க கூட படமா என்பது சந்தேகம் தான். ஆனால் திருமணம் ஆனவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். காதலர்களும் பார்க்கலாம் தப்பில்லை தப்பில்லை.😉

My Rating : ⭐⭐⭐/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023