Chandramukhi 2 - 2023

#Chandramukhi2 - 2023

ராதிகாவின் குடும்பத்தில் அடுத்தடுத்த நடக்கும் சம்பவங்களுக்கு பரிகாரம் செய்ய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழி பட வேண்டும் என குடும்ப ஜோதிடர் சொல்கிறார்.
ராதிகா தன்னுடைய குடும்பத்தை அழைத்துச் செல்ல, ராதிகா மகளின் குழந்தைகளுக்கு துணையாக செல்லும் ராகவா ஜீ. 😉

அதற்கு பிறகு அங்கே நடக்கும் அடுத்தடுத்து இவர்களுக்கு நடக்கும் சம்பவங்களால் குலதெய்வ வழிபாடு நடந்ததா இல்லையா? ராதிகாவின் குடும்பத்திற்கு வரும் பிரச்சினைகளில் இருந்து அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

அடேய் இன்னும் எத்தனை காலம் தான் இதையே உருட்டுவிங்க. காமெடி கொஞ்சம் நல்லா இல்லை. தலைவி காங்கனா நடிப்பு சொல்ல தேவையில்லை எல்லாத்துக்கும் ஒரே பாவனை தான். ஏதோ லட்சுமி அக்கா பரவாயில்லை. ராகவா ஜீ ஏன் இந்த கொலை வெறி.

இந்த மொக்கை கதையில் அனி இசையும், ரஜினி நடிப்பும் கலந்து இருந்தா ஏதோ கொஞ்சமாவது பார்க்க முடியும்.

My Rating : ⭐⭐/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

A History of Violence - 2005

The Exorcist Believer - 2023