Raththam - 2023

Raththam - 2023
Tamil - Crime/Drama


பிரசவத்தின் போது மனைவி இறந்ததற்க்கு தான் காரணம் என்கிற மனநிலையில் இருக்கும் கதாநாயகன். கதாநாயகன் சென்னையில் செய்து கொண்டு இருந்த புலனாய்வு பத்திரிகை வேலையை விட்டு மகளுடன் கொல்கத்தாவிற்கு சென்றுவிடுகிறார். நாளடைவில் குடிக்கு அடிமையாகி விடுகிறார்.

இந்நிலையில் கதாநாயகன் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் பத்திரிக்கையாளரும், நண்பருமான நிழல்கள் ரவின் மகன் கொலை செய்யப்படுகிறார்.

நிழல்கள் ரவி கேட்டுக்கொண்ட காரணத்தால் மீண்டும் அந்த பத்திரிக்கை நிறுவனத்தில் சேர்கிறார் கதாநாயகன். கதாநாயகன் நண்பன் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க தொடங்கும் போது சில கொலைகள் நடக்கின்றது.

நடக்கும் கொலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதாக கதாநாயகன் கண்டுபிடிக்கிறார். அந்த கும்பல் யார்? அவர்கள் கொலை செய்வதற்கான காரணம் என்ன? அதன் பிண்ணனியில் இருப்பது யார்? கதாநாயகயன் இறுதியில் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

அண்ணே ஆண்டனி அண்ணே ஒரு நல்லா கதையை தேர்ந்தெடுத்து நடிங்க சத்தியமா முடியல.

இயக்குநர் கதை நன்றாக எழுதி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் தரமான படமாக வந்து இருக்கும்.

மொத்ததுல கொஞ்சம் விட்டு இருந்தா மூளை செதறி மூக்கு வழியா வந்து இருக்கும் இரத்தம்.

My Rating : ⭐.5/5

Popular posts from this blog

Still Time - 2022 aka ERA ORA

The Equalizer - 2014

The Creator - 2023