Satyaprem Ki Katha - 2023
Satyaprem Ki Katha - 2023
Hindi - Romance/Drama
Tamil Dub🚫
காதலிப்பவர்களும் கல்யாணம் செய்து கொண்டவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
படத்தோட கதாநாயகன் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த வேலை வெட்டி இல்லாதவன். இதனால் இவருக்கு யாரும் பெண் தரமாட்டுறாங்க.
கதாநாயகனுக்கு அப்பா, அம்மா, தங்கை எல்லாம் தான் குடும்பம். ஆனால் இவருக்கு அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
அப்படி இருக்கும் போது கதாநாயகன் கதாநாயகியை விழா ஒன்றில் சந்திக்கிறான். கதாநாயகி எனக்கு ஏற்கனவே Boy Friend (காதலன்) இருப்பதாக கதாநாயகனிடம் சொல்கிறாள்.
இந்நிலையில் ஒரு வருடம் கழித்து கதாநாயகன் கதாநாயகியை அதே இடத்தில் பார்க்கிறான். கதாநாயகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்ய இருக்கும் கதாநாயகியை காப்பாற்றுகிறான். ஆனால் மனம் உடைந்து இருக்கும் கதாநாயகிக்கு கதாநாயகன் காப்பாற்றியதில் உடன் பாடில்லை.
கதாநாயகியின் அப்பா ஒரு மிகப்பெரிய பணக்காரர். தன்னுடைய பெண்ணை காப்பாற்றிய கதாநாயகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
கதாநாயகிக் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி கதாநாயகியை சம்மதிக்க வைக்கிறார்.
மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் நபர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பெண் கொடுப்பதால் கதாநாயகனுக்கு ஆச்சரியமும், பெற்றோர்களுக்கு சந்தேகமும் வருகிறது.
இருவருக்கும் திருமணம் மட்டும் தான் ஆகிறது மற்றபடி நடக்க வேண்டிய ஏதும் நடக்காம இருக்கு. நாயகி எப்பவும் ஏதோ ஒரே குழப்பமான மனநிலையில் இருக்கிறாள். கதாநாயகி அப்படி இருப்பதற்கான காரணம் என்ன? கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் நடித்த கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் அருமையாக நடித்துள்ளார்கள். திருமணம் ஆனா பிறகு இருவருக்கும் இடையே வரும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
படத்தில் வரும் பல வசனங்கள் தரம். முதல் பாதி காமெடி கலந்து கலகலப்பாகவும், இரண்டாம் பாதி அப்படியே வேற மாதிரி மாறுகிறது.
இந்த படத்தில் ஒரு சில உதட்டோடு உதடு வைத்து தரும் முத்தக்காட்சிகள் இருப்பதால் பார்த்துவிட்டு குடும்பத்தோடு பார்க்கலாம என்று முடிவு செய்யுங்கள்.
My Rating : ⭐⭐⭐.25/5