Posts

The Equalizer - 2014

Image
The Equalizer - 2014 English - Crime Action/Thriller Tamil Dub❌ முன்னாள் Marine மற்றும் Defence Intelligence Agency அதிகாரியாக இருந்த படத்தோட கதாநாயகன் ஒய்வுபெற்ற பிறகு பாஸ்டன் நகரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஹார்டுவேர் கடையில் பணிபுரியும் கதாநாயகன் சக ஊழியரான பெண்ணின் திருமண மோதிரத்தையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற நபரிடமிருந்து பொருளை மீட்டு கொண்டுவருகிறார். ஆனால் கதாநாயகன் தான் செய்யும் உதவிகளை மற்றவர்களுக்கு யார் என்பது தெரியாவண்ணம் செய்கிறார். இரவில் தூக்கம் வரமால் இருப்பதால் அதிகமான நேரம் புத்தகம் படிப்பதும், பக்கத்தில் இருக்கும் கபேவில் நேரத்தை கழிப்பதுமாக இருக்கிறார். அதை போல கபேவிற்கு வரும் இளம்பெண் நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். அந்த இளம்பெண் தான் ஒரு பாடகியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் ஆனால் இப்போது விபச்சாரியாக இருப்பதாக கூறி CD கேஸட் ஒன்றை கதாநாயகனிடம் தருகிறாள். வழக்கம் போல் அந்த இளம்பெண் வருகைக்கு காத்திருக்கும் கதாநாயகன் அன்று அவள் இரஷ்யன் மாபியா கும்பலை சேர்ந்த நபரால் கடினமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக ...

The Equalizer 2 - 2018

Image
The Equalizer 2 - 2018 English - Crime Action/Thriller Tamil Dub✅ Equalizer பட வரிசையில் வந்த 2 வது படமாகும். கதாநாயகன் Marine மற்றும் DIA பிரிவுகளில் பணியாற்றியவர். படத்தோட ஆரம்பத்தில் இரயிலில்  கடத்தப்படும் ஒரு குழந்தையை கதாநாயகன் ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறார். கால் டேக்ஸி ஒட்டுநனராக இருந்துக்கொண்டே தன்னுடன் DIA வில்  பணியாற்றிய பெண் மோழியின் உதவியுடன் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். அதே சமயம் கதாநாயகன் வசித்து வரும் பகுதியில் ஒரு வாலிபன் தவறான பாதையில் செல்கிறான். ஒரு நாள் கதாநாயகனின் பெண் தோழி இறந்துவிடுகிறாள். ஆரம்பத்தில் பெண் தோழி இறந்ததற்கு காரணம் கொள்ளையாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் கதாநாயன் இது ஒரு திட்டமிட்ட கொலை என முடிவு செய்கிறான். அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறார். கதாநாயகனின் பெண் தோழி இறந்ததற்கு காரணம் என்ன? அந்த இறப்பிற்கு பின்னால் இருப்பது யார்? கதாநாயகன் தவறான வழியில் செல்லும் வாலிபனை மீட்டாரா? கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. தலைவன் Denzel Washington எப்பவும் தனி ரகம் தான்.ம...

A History of Violence - 2005

Image
Leo - 2023 A History of Voilence - 2005 🔞 English - Action/Thriller Tamil Dub❌ மனைவி, மகன் மற்றும் மகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழும் படத்தோட கதாநாயகன் அமெரிக்காவில் சிறிய உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் ஒரு நாள் கதாநாயகன் நடத்தும் உணவகத்திற்கு வரும் கொள்ளையர்கள் இருவரும் வருகிறார்கள். வந்த அந்த கொள்ளையர்கள் அங்கே பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடந்த கொள்ளும் போது ஏற்பட்ட பிரச்சனையால் கதாநாயகன் இருவரையும் துப்பாக்கியால் சுட இறந்தவிடுகிறார்கள். உணவகத்தில் இருந்த வேலை செய்யும் பெண் மற்றும் வாடிக்கையாளர்களை காப்பாற்றியதால் கதாநாயகனை அனைவரும் கொண்டுகிறார்கள். உள்ளூர் மக்கள் முதல் அனைவரும் கதாநாயகனை புகழ்கிறார்கள். அன்று இரவே கதாநாயகன் பற்றி பல செய்தி தொலைக்காட்சியில் வர தொடங்குகிறது. அவரை செய்தி ஊடகங்கள் பேட்டி எடுக்கும் முயற்சி செய்கிறார்கள். அதற்கு பிறகு கதாநாயகன் ஓரே இரவில் பிரபலமாகிறான். அதனால் கதாநாயகனுக்கும் அவரின் கும்பத்திற்கும் ரவுடி கும்பலால் பிரச்சனைகள் வர தொடங்குகிறது. ரவுடி கும்பல் தரும் பிரச்சனைகளால் கதாநாயகனுக்கு ஆனது என்ன? கதாநாயகனை தேடி வரும் கும்பல் யா...

Totally Killer - 2023

Image
Totally Killer - 2023 English - Time Travel Slasher/Thriller Tamil Dub❎ படத்தோட ஆரம்பத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதுடைய 3 இளம்பெண்கள் ஹாலோவீன் சமயத்தில் தொடர்ச்சியாக அனைவரும் 16 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதாக நிருபர் தனது Podcast மூலமாக ஹாலோவீன் போது சொல்கிறார். அந்த மூன்று பெண்களையும் படுகொலை செய்தது யார் என்பது தெரியாததால் அந்த நபருக்கு Sweet Sixteen Killer என பெயர் வந்ததாகவும் சொல்கிறார். படத்தோட கதாநாயகி ஹாலோவீன் இரவு அன்று தனது தோழியுடன் வெளியே செல்ல இருக்கிறாள். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட தனது தோழிகளுக்கும் உனக்கும் ஒரே வயது என்பதால் சீரியல் கில்லரால் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பு இருப்பதாக கதாநாயகியின் அம்மா சொல்கிறாள். ஆனால் கதாநாயகி அப்பி மற்றும் அம்மாவிடம் பேசி தோழியுடன் வெளியே செல்கிறாள். அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த கதாநாயகியின் அம்மா சீரியல் கில்லரால் படுகொலை செய்யப்படுகிறாள். கதாநாகயின் தோழி உருவாக்கி வரும் டைம் மிஷின் மூலமாக கடந்த காலத்திற்கு சென்று சீரியல் கில்லர் செய்ய போகும் முதல் கொலையை தடுத்து அவனை சிறை...

The Exorcist Believer - 2023

Image
The Exorcist Believer - 2023 English - Supernatural/Horror Tamil Dub❎ "Welcome to The வஞ்சிபுகழ்ச்சியணி World மாமே" பூகம்பத்தால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் இருக்கும் கர்ப்பிணியான கதாநாயகி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்கள் இரு உயிரில் ஒரு வரை தான் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் குழந்தையை காப்பாற்ற முடியு செய்கிறார் கதாநாயகன். மனைவி இறந்தபிறகு கடவுள் நம்பிக்கை இல்லாத இருக்கும் கதாநாயகனுக்கு இருப்பது மகள் தான்.  இப்படியே காலங்கள் 13 வருடம் ஒடுகிறது மகள் பள்ளிகூட செல்கிறாள். இந்நிலையில் இறந்த அம்மாவை தொடர்பு கொள்ள மகள் மற்றும் அவளுடைய தோழி இருவரும் காட்டிற்குள் சென்று சடங்குகள் செய்யுகிறார். சென்ற அந்த சிறுமிகள் வரவில்லை. கதாநாயகன் தன்னுடைய மகள் காணவில்லை என்பதால் தேட தொடங்குகிறார். ஆனால் அந்த இரு சிறுமிகளும் மூன்று நாட்களுக்கு பிறகு கால்களில் தீக்காயங்களுடன் காணப்படுகிறார்கள். திரும்ப வந்த இரண்டும் சிறுமிகளும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் பேய் பிடித்து இருப்பது தெரியவர காலில் இருக்க...

Shit Boot Three - 2023

Image
Shot Bhot Three - 2023 அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் IT கம்பெனியில் பணிபுரியும் தம்பதிகளான கதாநாயகன் கதாநாயகி இருவருக்கும் மகன் (கைலாஷ்) ஒருவன் இருக்கிறான். கைலாஷிற்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் தனிமையை உணர்கிறான். இதனால் நாய் ஒன்றை வளர்க்க பெற்றோரிடம் கேட்க கதாநாயகி மறுக்கிறார். இதனை தெரிந்து கொண்ட நண்பரகள் கைலாஷ் பிறந்த நாள் பரிசாக நாயை (மேக்ஸ்) பரிசாக தருகிறார்கள். ஆரம்பத்தில் நாயை வெறுக்கும் கதாநாயகி நாளடைவில் ஏற்றுக்கொள்கிறாள். இந்நிலையில் கைலாஷ் பெற்றோர்களான (சினேகா, வெங்கட் பிரபு) இருவரும் வெளியூர் செல்கிறார்கள். அந்நேரத்தில் கைலாஷ் வளர்த்த Max காணாமால் போகிறது. பெற்றோர்களுக்கு தெரியாமல் காணாமல் போன மேக்ஸினை கண்டுபிடிக்க கைலாஷ் மற்றும் மூன்று நண்பர்களும் செல்கிறார்கள். காணாமல் போன நாயினை தேட 4 சிறுவர்கள் ஆரம்பிக்கிறார்கள். நாயை தேடிச்சென்ற 4 சிறுவர்களுக்கு என்ன ஆனது? இறுதியில் 4 சிறுவர்கள்  நாயை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். இது முற்றிலும் குழந்தைகளுக்கான படம். இயக்குநர் இன...

The Creator - 2023

Image
The Creator- 2023 English - SciFi Action/Drama Tamil Dub❌ எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையே நடக்கும் போராட்டம் தான் கதை. படத்தோட கதாநாயகன் அமெரிக்கா அரசாங்கம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கருவியால் (AI) லாஸ் ஏஞ்சலஸ்யில் நடந்த அணு ஆயுத வெடி விபத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்தவர். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் AI களை அழிக்க அதன் நட்பு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். அதற்கு பிறகு கதாநாயகன் வாழ்க்கையில் பல சமயங்கள் நடக்கின்றது. படத்தோட கதாநாயகன் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் AI களை வெறுக்கிறார். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் கதாநாயகனை நீயூ ஆசியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட AI ஜ கண்டுபிடித்து அழிக்கும் பொறுப்பை தருகிறார்கள். கதாநாயகன் அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்ன? அவர் வாழ்க்கை நடந்த சம்பவங்கள் என்ன? Las Angels யில் வெடிவிபத்து நடந்தது எதனால்? அதற்கு பின்னால் இருப்பது யார்? உலகை அச்சுறுத்துவதாக செல்லப்படும் AI ஐ கதாநாயகன் கண்டுபிடித்து அழித்தாரா? இல்லையா? என்பதே ப...