Posts

Mission Impossible Dead Reckoning Part One - 2023

Image
Mission Impossible Dead Reckoning Part One - 2023 English - SciFi Spy Action/Thriller இரஷ்ய அரசாங்கம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவியான என்டிடி (Entity) வைத்துக்கொண்டு எந்தவொரு நாட்டின் இரகசியங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அந்நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் எல்லாவற்றையும், மொத்தமாக அந்த நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். Entity யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை வைத்து உலகத்தில் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்நிலையில் அந்த Entity கருவியை மற்ற உலக நாடுகள் அடைய முயற்சி செய்கிறார்கள். ஆனால் Entity தன்னிச்சையாக செயல்பட தொடங்குகிறது. படத்தோட கதாநாயகனுக்கு அந்த Entity கருவியை கண்டுபிடிக்கும் வேலையை IMF தருகிறது. இன்னொரு பக்கம் தன்னிச்சையாக செயல்பட தொடங்கிய Entity தனக்கான குழுவை தேர்ந்தெடுத்து திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த Entiya கருவியை கட்டுப்படுத்த ஒரே வழி இரு துண்டுகளாக இருக்கும் சாவி தான். அதனை தேடி கண்டுபிடிக்க கதாநாயகன் மற்றும் அவனது குழுவும் களத்தில் இறங்குகிறார்கள். மறுபுறம் அ...

Raththam - 2023

Image
Raththam - 2023 Tamil - Crime/Drama பிரசவத்தின் போது மனைவி இறந்ததற்க்கு தான் காரணம் என்கிற மனநிலையில் இருக்கும் கதாநாயகன். கதாநாயகன் சென்னையில் செய்து கொண்டு இருந்த புலனாய்வு பத்திரிகை வேலையை விட்டு மகளுடன் கொல்கத்தாவிற்கு சென்றுவிடுகிறார். நாளடைவில் குடிக்கு அடிமையாகி விடுகிறார். இந்நிலையில் கதாநாயகன் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் பத்திரிக்கையாளரும், நண்பருமான நிழல்கள் ரவின் மகன் கொலை செய்யப்படுகிறார். நிழல்கள் ரவி கேட்டுக்கொண்ட காரணத்தால் மீண்டும் அந்த பத்திரிக்கை நிறுவனத்தில் சேர்கிறார் கதாநாயகன். கதாநாயகன் நண்பன் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க தொடங்கும் போது சில கொலைகள் நடக்கின்றது. நடக்கும் கொலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதாக கதாநாயகன் கண்டுபிடிக்கிறார். அந்த கும்பல் யார்? அவர்கள் கொலை செய்வதற்கான காரணம் என்ன? அதன் பிண்ணனியில் இருப்பது யார்? கதாநாயகயன் இறுதியில் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. அண்ணே ஆண்டனி அண்ணே ஒரு நல்லா கதையை தேர்ந்தெடுத்து நடிங்க சத்தியமா முடியல. இயக்குநர் கதை நன்றாக எழுதி இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கவனம் ச...

800 - 2023

Image
800 - 2023 Tamil - Biopic Sports/Drama இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் குழந்தை பருவத்தில் இருந்து 800 விக்கெட் எடுத்தா காலகட்டம் வரை படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆங்கியேலயர்களால் அழைத்து சென்ற குடும்பங்களில் முத்தையா முரளிதரன் குடும்பம் ஒன்று. அங்கே நடக்கும் பிரச்சனைகளுக்கு இடையே சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் முத்தையா முரளிதரனுக்கு இருக்கிறது. அங்கே நடக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொண்டார்? இலங்கை கிரிக்கெட் அணியில் எப்படி சேர்ந்தார்? இலங்கை அணிக்கு விளையாடுவதால் அவர் சந்தித்த சிக்கல்கள் என்ன? கிரிக்கெட்டில் 800 விக்கெட் எப்போது எடுத்தார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். தலைவர் மேதகு பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்த நரேன் வரும் போது எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் எல்லாம் வைத்து பார்த்தால் இது தான் உண்மையும் உண்மையின் உண்மையா என்ன இதெல்லாம் மறைந்தவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்காக காலமெல்லாம் காத்திர...

Enakku Endey Kadaitathu - 2023

Image
Enakku Endey Kidaiyaathu - 2023🔞 Tamil - Crime/Thriller படத்தோட கதாநாயகன் கால் டாக்ஸி ஓட்டுநர் வேலை செய்பவர். ஒருநாள் இரவு பாரில் இருந்து வந்த பெண் கதாநாயகனின் காரில் ஏறுகிறாள். அந்த பெண் கதாநாயகனை வீட்டிற்கு சரக்கு அடிக்க வர சொல்கிறார்கள். கதாநாயகன் அந்த பெண் சொன்னதை கேட்டு வீட்டுக்கு செல்கிறான். இருவரும் சரக்கு எல்லாம் (எல்லாமும் தான்) சாப்பிட்ட பிறகு கதாநாயகன் பாத்ரூம் போகும் போது பக்கத்து அறையில் பிணம் இருப்பதை பார்க்கிறான். அந்த வீட்டில் இருந்து கதாநாயகன் தப்பிக்க முயற்சி செய்கிறான். ஆனால் அந்த வீட்டில் Finger Print சென்சார் லாக் இருப்பதால் கதாநாயகனால் தப்பிக்க முடியவில்லை. இதனை அந்த பெண் பார்த்து விட இருவருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு காரணமாக மயங்கி விழுகிறாள். அப்போது அந்த வீட்டில் கொள்ளை அடிக்க திருட ஒருவன் வருகிறான். வந்த அந்த திருடனுக்கு ஆனது என்ன? அந்த வீட்டில் இறந்தவர் யார்? அவர் இறந்தற்க்கான காரணம் என்ன? இறுதியில் கதாநாயகன் அந்த வீட்டில் இருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இயக்குநர் தான் படத்தோட கதாநாயகன் நன்றாக நடித்துள்ளார். திரைகதை விற...

The Road - 2023

Image
The Road - 2023 Tamil - Crime/Thriller படத்தோட கதாநாயகி (த்ரிஷா) கணவன் மற்றும் மகனுடன் மகிழ்ச்சி ஆக வாழ்ந்து வருகிறார். காரில் வெளியூர் சென்ற கணவன் மற்றும் மகன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு வரும் கதாநாயகி அங்கே இதே போன்ற பல விபத்து நடப்பதை பற்றி தெரிந்து கொள்கிறாள். இன்னொரு பக்கம் கல்லூரியில் பேராசிரியர் ஆக இருக்கும் மாயன் (Dancing Rose Shabeer) மீது மாணவி தந்த போலியான பாலியல் குற்றச்சாட்டால் பணி நீக்கம் செய்யப்படுகிறார். பிறகு மாயன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன? கதாநாயகி நடந்த விபத்துகளை பற்றி விசாரிக்க தொடங்கிறாள். இறுதியில் விபத்து எப்படி நடந்தது? விபத்துகள் நடக்க காரணம் என்ன? இருவருக்கும் நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதி கதை. படத்தோட முதல் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி காட்சிகளை நறுக்கி இருந்தால் விறுவிறுப்பான படமாக வந்து இருக்கும். இரண்டாம் பாதி தரமாக இருந்தது படத்தின் நீளம் தான் இந்த ரோட் படத்திற்கான வேகத்தடை. பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தாராலமா திரையரங்கு சென்று பாரக்கலாம். My Rating : ⭐⭐.75/5

Irugapatru - 2023

Image
Irugapatru - 2023 Tamil - Family/Drama கணவன் மனைவி இருவருக்கும் இடையே வரும் சிறு சிறு பிரச்சனைகளையும் அதற்கான தீர்வை சொல்லும் படமாகவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இறுகப்பற்று. மனநல ஆலோசகரான ஷ்ரதா ஸ்ரீநாத்-யும் விக்ரம் பிரபும் தம்பதிகள். இருவருக்கும் இடையே எந்தவொரு பிரச்சனைகள் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஷ்ரதா ஸ்ரீநாத். இன்னொரு தம்பதிகளான விதார்த் அபர்ணதி இருவருக்கும் ஓரு குழந்தையும் உள்ளது. அபர்ணதி குண்டாக இருப்பதால் அதிகமான வெறுப்பை காட்டும் விதார்த். இதனால் விவாகரத்து செய்ய முடிவு எடுக்கிறார். காதல் திருமணம் செய்துக்கொண்ட இன்னொரு தம்பதிகளான ஸ்ரீ மற்றும் சானியா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை போட்டு கொள்கிறார்கள். இந்த இரு தம்பதிகளின் பிரச்சனை மனநல ஆலோசகரான ஷ்ரதா ஸ்ரீநாத்யிடம் வருகிறது. ஒருகட்டத்தில் அதுவும் ஷ்ரதா மற்றும் விக்ரம் பிரபு இருவருக்கும் இடையே பிரச்சனை வர காரணமாகிறது. ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் விக்ரம் பிரபு இருவருக்கும் இடையே பிரச்சனை வர காரணம் என்ன? ஷ்ரதா மற்ற இரு தம்பதிகளுக்கு கொடுத்த ஆலோசனை என்ன? இந்த மூன்று தம்பதிகளுக்கு...

Fight Against Evil 2021

Image
Fight Against Evil - 2021 Chinese - Action Crimes/Drama Tamil Dub❌ போலீஸ் அதிகாரியான படத்தோட கதாநாயகன் மனைவியுடன் புத்தாண்டை கொண்ட ஊருக்கு செல்கிறார். ஏற்கனவே அந்த ஊரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் உள்ளூர் மக்களை மிரட்டி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அந்த கும்பல் ஆன்லைன் சூதாட்டத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மேலும் அந்த கும்பல் அங்கே இருக்கும் வசதிபடைத்தை நபர்களை தனது ஆன்லைன் சூதாட்டத்தில் மிரட்டி சேர்த்து கொள்கிறார்கள். பணத்தை சூதாட்டத்தில் சூழ்ச்சியால் இழந்து அந்த கும்பலுக்கு பயந்து ஏதும் செய்ய முடியாமல் இருக்கும் உள்ளூர் மக்களில் ஒருவர் கதாநாயகனின் மாமனார். இதனை தெரிந்து கொண்ட கதாநாயகன் அந்த கும்பலை எதிர்க்க முடிவு செய்கிறான். அதனால் கதாநாயகன் உள்ளுர் காவல்துறையினர் உடன் இணைந்து செயல் பட விரும்புகிறார். கதாநாயகன் நினைத்தப்படி உள்ளுர் காவல்துறையினர் உடன் இணைந்து செயல்பட்டாரா? இல்லையா? கதாநாயகன் தொடங்கிய விசாரணை என்ன ஆனது? அந்த கும்பலால் கதாநாயகனுக்கு வந்து பிரச்சனைகள் என்ன? இறுதியில் கதாநாயகன் நினைத்தப்படி எல்லாம் நடந்தத...